These are public posts tagged with #tamil. You can interact with them if you have an account anywhere in the fediverse.
At least put your signature in Tamil: PM Modi takes shot at DMK govt over language row | India News
#Tamil #PMModi #DMK #IndiaNews #MastIndia #MastodonIndians #India @mastodonindians
https://reddit.com/r/india/comments/1jsy75s/at_least_put_your_signature_in_tamil_pm_modi/
@cendawanita reminds of when I was in South India during the Boxing Day Tsunami, and until we got to a TV with BBC, we had no idea what happened that day, because there was no word in #Tamil or #Telugu, since it had been so long since the region had last had one.
Our most-read story in 2025, "Indian Women Dry Fish With the Power of the Sun, in the Palms of Their Hands" is now available in Tamil, part of our commitment as the only Asian American-serving science news outlet. Check it out!
#india #tamil #women #fish #food #solar #climate #photography #news #journalism
Many times I feel we Tamils won't get justice being part of India. If we do, we must leave work and run behind our girls all the time to get our rights.
#India #Delimitation #Democracy #Injustice #Tamil #Tamilnadu #Population
இப்படி பன்னா எப்படி?
#தமிழ் மொழி பெயர்பாளர்களே! ஒரு ப்ராண்டு அல்லது மென்பொருளின் பெயரை தயவு செய்து அப்படியே தமிழில் எழுதுங்க
நெக்ஸ்ட்க்ளவ்டு குக்புக் (Nextcloud Cookbook) என்பதை தான் நெக்ஸ்ட் முகில் சமையல் நூல்னு மாத்திருக்காங்க, முடியல.
இது மெஷின் மொழிபெயர்ப்பா இல்ல மனுச மொழிபெயர்ப்பானு தெரில.
#BritishAirways introduces #Tamil assistance at #ChennaiAirport
An in-person meet-and-assist service at Chennai airport
To assist flyers and senior citizens who have trouble understanding or communicating in English by conversing in Tamil
Service will be available during boarding at the airport, transit, and upon arrival at #HeathrowAirport #London.
எளிய தமிழில் பைத்தான் – 4
https://kaniyam.com/learn-python-in-tamil-4/
நகைச்சுவைத் தொடர்.
பைத்தான் கற்பது இலட்சியம்.
சிரித்துக் கொண்டே இருப்பது நிச்சயம்.
If a religious person reads this book, and if he really has dignity, before page 30, he will kill himself.
No wonder Periyaar is so hated by believers. This guy knows how to knock on your conscience.
#Tamil #Periyaar #Rationalism #Atheism #Religion #India #Dravidian
முதல் நிரல்
கணினி நிரல் உலகில், காலம் காலமாக செய்யப்பட்டு வரும் ஒரு சடங்கு ஒன்று உள்ளது. எல்லா கணினி நிரல் நூல்களிலும் இதைக் காணலாம். என்ன? அறிவியலிலும் சடங்கா? ஏன் இப்படி? ஆம். ஆனால் இங்கு நாம் எந்தக் கடவுளையும் வணங்கத் தேவையில்லை. பூசைகள் ஏதுமில்லை.
முதல் நிரலாக, ‘Hello World’ என்பதை திரையில் அச்சடிப்பதே முதல் நிரல். இதுதான் இத்துறையின் ஒரு சின்ன சடங்கு. சாதாரணமாகவே நாம், சடங்கு என்று வந்து விட்டால், எந்தக் கேள்வியும் கேட்க மாட்டோம்தானே! ஆனால் அறிவியலில் கேட்கலாம். மாற்றலாம். முதல் நிரலாக ‘Hello Kanchipuram’ என்று உங்கள் ஊர்ப் பெயரைக்கூட எழுதலாம்.
இப்போது நமது முதல் நிரலை எழுதலாம் வாங்க.
எங்கே எழுதுவது? எப்படி சேமிக்க வேண்டும்?
இரண்டு வழிகளில் சிறிய பைத்தான் நிரல்களை இயக்கலாம்.
Interactive Python Shell
ஒரு file ல் python நிரலை எழுதி, சேமித்து, பின் அதை இயக்கலாம்.
இரண்டு வழிகளையும் பார்ப்போம்.
பைத்தான் ஷெல்
உங்கள் கணினியில் உள்ள டெர்மினலை திறந்து கொள்ளுங்கள். முந்தைய அத்தியாயத்தில், எப்படி டெர்மினலை திறப்பது என்று பார்த்தோம். ( இணைப்பு ). கருப்புத்திரை வந்து விட்டதா? அருமை. இனி இதுவே நமது வீடு. ‘விட்டு விடு கருப்பா’ என்று கேட்டாலும் ‘விடாது கருப்பு’ இனி.
இப்போது python3
என்று தட்டச்சு செய்து [enter]
அடியுங்கள். விண்டோசு எனில் வெறும் python
போதுமானது.
இப்போது நீங்கள் பைத்தான் ஷெல்லுக்குள் குதித்து விட்டீர்கள்.
இப்போது >>>
என்று தெரியும். இதில் எல்லா குட்டி குட்டி பைத்தான் நிரல்களையும் எழுதிப் பழகலாம். இது Python Interpreter Prompt என்றும் அன்போடு அழைக்கப்படும்.
அதில், பின்வருமாறு எழுதுங்கள்.
print("Hello World")
பிறகு ஒரு [enter]
. அவ்வளவுதான். உங்கள் ‘இதுவே என் கட்டளை’ என்று நீங்கள் சொன்னபடியே, பைத்தான் ‘Hello World’ என்று திரையில் காட்டி விடும்.
இங்கே print என்பது திரையில் தான் எழுதிக் காட்டும். உங்கள் பிரின்டரில் அல்ல.
எனது லினக்ஸ் டெர்மினலில் பின்வருமாறு வருகிறது.
pythonshrini@dell-optiplex-9100 ~> python3Python 3.12.3 (main, Feb 4 2025, 14:48:35) [GCC 13.3.0] on linuxType "help", "copyright", "credits" or "license" for more information.>>> print("Hello World")Hello World>>>
உங்கள் கணினியில் பைத்தான் வெர்சன் மாறலாம். மற்றபடி, >>> ஐ ஒட்டியுள்ள இரண்டு வரிகள் ஒரே போலத்தான் இருக்கும். தட்டச்சு பிழை ஏதும் இருந்தால், பிழைச் செய்தி நிறைய வரும். கவலை வேண்டாம். மீண்டும் ஒருமுறை பொறுமையாக டைப் அடியுங்கள்.
நீங்கள் அந்த print(“Hello World”) வரியை அடித்து என்டர் தட்டிய உடனேயே, உங்கள் நிரல் இயக்கப்பட்டு, அதன் Output ஆனது, திரையில் காட்டப்படுகிறது.
இங்கு print() என்பது ஒரு function. இல்லை, இல்லை. நீங்கள் நினைப்பது போல, இது திருமணம், காதுகுத்து போன்ற function இல்லை. இது கணினியில் உள்ளே நடைபெறும் ஒரு செயல். மொய் எல்லாம் வைக்க வேண்டாம்.
ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய, நாம் கணினிக்கு ஆணையிட உதவுவது இந்த function. ஒவ்வொரு வேலைக்கும் ஒரு function இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
செல்லப் பிராணிகள் வளர்ப்போரிடம் கேளுங்கள். நாய், பூனை, யானை, சிங்கம், புலி, டைனசோர் போன்ற விலங்குகளை வேலை வாங்க, ஒவ்வொரு வேலைக்கும் ஒரு ஒலி, சொல் வைத்திருப்பார்கள். அதே போலத்தான் எல்லா நிரலாக்க மொழிகளிலும். பல function கள் உள்ளன. இருப்பவை பத்தாது என்று, பல நேரங்களில் கடன் கூட வாங்குவோம். ( இந்த விலங்குகளுக்காவது பல்வேறு சொற்கள் உள்ளன. எனக்கெல்லாம் நித்யாவின் ‘பார்வை ஒன்றே போதுமே’ தான். நானே சூழ்நிலைக்கேற்ப, அர்த்தம் புரிந்துகொண்டு வேலைகளை செய்தாக வேண்டும். இதை polymorphism என்பார்கள். அதை பிறகு பார்போம்.)
இந்த print() ஆனது, எப்போதும் உள்ளே எதைக் கொடுத்தாலும், திரையில் காட்டி விட்டு, சமர்த்தாக அடுத்த ஆணைக்கு காத்திருக்கும்.
நாம் உள்ளே ‘Hello World’ என்று தந்தோம் அல்லவா. இப்போது, அதை மாற்றி வேறு எதையாவது கொடுங்கள். காதலர், துணைவர், நண்பர்கள் பெயர், உங்கள் பெயர், ஊர்பெ பெயர் என தந்து திரையில் காண்பதைக் கண்டு மகிழ்ந்திருங்கள்.
print("Hello from shrini")print("I am from kanchipuram")print("Python is easy")
இப்படி சிலபல வரிகளை அடித்துப் பழகுங்கள்.
இதில் () க்குள் தரும் இந்த double quotes முக்கியம். சொற்களுக்கு முன்னும் பின்பும் அதைத் தர வேண்டும். மறந்தால் போச்சு. ஒரு பாராவிற்கு பிழைச்செய்தி காட்டும். double quoteக்கு பதில் single quote கூடத் தரலாம். முன்னும் பின்னும் ஒரே மாதிரி தர வேண்டும்.
வேண்டுமென்றே முதலில் மட்டும் double quote தந்து என்ன ஆகிறது என்று பாருங்கள். பயப்பட வேண்டாம். கணினி ஒன்றும் கெட்டுப் போகாது. பிழைச்செய்தி காட்டும். அதைப் படித்து புரிந்து கொள்ள முயலுங்கள். பெரும்பாலும், அதிலேயே தீர்வும் இருக்கும்.
எனது நண்பன் பாலவிக்னேஷ், பிழைச்செய்திகளை ஒரு துப்பறியும் நாவலைப் படிப்பதைப்போல படிப்பார். அதில் தான் எல்லா சிக்கல்களுக்கான தீர்வும் இருக்கும் என்பார்.
பைத்தான் ஷெல் – இல் இருந்து வெளியேறுவது எப்படி?
மிக எளிதுதான். குனு லினக்ஸ் அல்லது மேக் கணினியில், [ctrl + d] அல்லது exit() என்று தருக. விண்டோசுக்கு [ctrl + z] அல்லது exit() தருக.
ஒரு முறை மூடி, மீண்டும் திறந்தால், பழைய நிரல் எதுவும் இருக்காது. துடைத்து வைத்த பலகை போல பொலிவாக, புதிதாக இருக்கும்.
எந்த எடிட்டர் பயன்படுத்தலாம்?
அது என்ன எடிட்டர்? வீடியோ எடிட்டர், ஆடியோ எடிட்டர் போல ஏதேனும் ஒன்றா?
ஆ. அப்படியும் சொல்லலாம். இது Text Editor பற்றியது.
பெரிய நிரல்களை எழுதி இயக்கும் போது, ஒவ்வொரு முறையும், ஷெல்லிலேயே அடித்து இயக்க முடியாது. எனவே நிரல்களை ஒரு file ல் சேமித்து வைத்தால், அதை அப்படியே எத்தனை முறை வேண்டுமானாலும் இயக்கி மகிழலாம்.
நாம் நெடுந்தூரம் செல்ல வேண்டுமெனில், நமது ஓட்டும் வாகனம் மிகவும் வசதியாக இருக்க வேண்டும். நாம் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும். கைகள் தானாக பிரேக், கிளட்ச், ஸ்டியரீங்கை இயக்க வேண்டும். நாம் வேறு, வண்டி வேறு அல்ல எனும் அளவுக்கு ஒத்திசைவு நடக்கும் போது, ‘பயணங்கள் முடிவதில்லை’ தானே. எனது நண்பன் உதயன், தனது வாகனத்தை ‘வந்தியத் தேவன்’ என்று அழைத்து, குடும்ப உறுப்பினராகவே நடத்தி வருகிறார். அந்த அளவுக்கு அது அவர் எண்ணப்படியும், அதன் போக்கின் படி அவரும் நடந்து கொள்வர்.
அது போலவேதான் இந்த Text Editor ம்.
ஒரு நல்ல டெக்ஸ்ட் எடிட்டரை ( உரைத்திருத்தி ) பழகி விட்டால் போதும். கீபோர்டு ஷார்ட்கட்டுகளை விரல்கள் பழகினால் போதும். நிரல்கள் பெய்யனப் பெய்யும் மழையெனப் பொழியத் துவங்கிவிடும்.
அடிப்படையாக, ஒரு எடிட்டரில் syntax highlighting என்றொரு விஷயம் இருக்க வேண்டும். ஒரு நிரலின் பல்வேறு கூறுகளை தனித்தனி நிறங்களில் காட்ட வேண்டும். Intendation தானாக அளிக்க வேண்டும். இது பற்றி பிறகு படிப்போம்.
சில எடிட்டர்கள் function, variable பெயர்களை தானாகவே காட்ட வல்லவை. முழுதாக டைப் செய்யாமல், எளிதில் தெரிவு செய்தே நிரல் எழுதலாம். இந்த வசதி இருந்தால் நல்லது. அவசியமில்லை.
நீங்கள் விண்டோசு பயனர் எனில் notepad கூட போதுமானது. ஆனால் அது வேண்டாம். அது மிகவும் சுமாரானது. ஆத்திர, அவசரத்துக்கு மட்டும் அதை பயன்படுத்தலாம்.
Notepad++ ஒரு நல்ல திறமூல இலவச எடிட்டர். அதை பதிவிறக்கி பயன்படுத்துங்கள்.
எளிதாக இருப்பதே எடிட்டர். பல்வேறு வசதிகள் நிறைந்து அதிக RAM குடிப்பது IDE – Integrated Development Environment எனப்படும்.
உங்களிடம் 8 GB க்கு மேலான RAM உள்ளது எனில், Pycharm Community Edition பயன்படுத்துங்கள். இப்போது VSCode ம் பரவலாக பயன்படுகிறது.
இவை குனு லினக்ஸ், மேக் கணினிக்கும் உள்ளன.
குனு லினக்ஸ் இயக்குதளமானது நிரலர்களுக்கு செல்லக் குட்டி. அதில் ஏராளமான எடிட்டர்கள் உள்ளன. அள்ள அள்ளக் குறையாத தங்கச் சுரங்கமாக அதில் பல கோடி மென்பொருட்கள் உள்ளன.
டெர்மினல் வாசிகளுக்கான vim, nano, இலகுவான gedit, kate, heavy weight பயில்வான்களுக்காக eclipe, pycharm என்று பல உள்ளன. எனது செல்லம் emacs எடிட்டர். நான் அதைக் கற்றுக் கொண்ட நாள் முதல் அதில் தான் வாழ்கிறேன். ‘என்ன வளம் இல்லை இந்த திரு ஈமேக்ஸ் எடிட்டரில்? ஏன் கையை வைக்க வேண்டும் அயல் எடிட்டரில்?’ நான் எனது நிரல்கள், வலைப்பதிவுகள், இந்த புத்தகம், Todo List, Notes என அனைத்தையும் Emacs ல் தான் எழுதுகிறேன். தினமும் நண்பர்களிடம் எழுத்திலேயே அரட்டை அடிக்கும் IRC chat கூட அதிலேயே தான். அதில் வேறு எங்கும் கிளைகள் இல்லாத Org Mode என்று ஒரு அட்டகாசமான விசயம் உள்ளது. உங்கள் சிந்தனைகளை சரியாக organize செய்து, திறம்பட எழுத வைத்து, உங்களை முன்னேற்றி விடும் ஒரு மாய பூதம் அது. Emacs is a editor for lifetime என்பர். அது உண்மைதான். ஒரு முறை கற்றுக் கொண்டால் போதும். ஏ ஆர் ரகுமான் கீபோர்டில் விளையாடுவது போல, நாமும் கணினி கீபோர்டில் வாழ்நாள் முழுதும் அதகளம் செய்யலாம்.
எனது மதத்தில் அவெஞ்சர் புராணம் என்று உள்ளது. அதில் உள்ள கதை ஒன்று.
சுபைடர்நாதர் (ஸ்பைடர்மேன்) ஒரு பிரபல கடவுள். அட, ஆமாங்க. பிற கடவுள்கள் போல, கெட்டவர்களை அழித்து, நல்லவர்களை காப்பாற்றுவார் அவர். ஒரு முறை அவரது நெஞ்சைப் பிளந்து காட்டுவார். அதில் லினக்ஸ், ஈமேக்ஸ், பைத்தான் மூவரும் தெரியும் அருட்காட்சி பற்றி அந்தக் கதையில் இருக்கும்.
சிலருக்கு எங்கோ கேட்ட கதை போலிருக்கும். நீங்கள் கேட்டவை அனைத்துமே இது போல கதைதான் என்று உணர்ந்தால் போதும்.
சரி விடுங்கள். ஆ, ஊ என்றால் ஈ மேக்ஸ் தான் என்று பாட ஆரம்பித்து விடுவேன். என் செல்லம் எனக்கு. உங்கள் காதலர் உங்களுக்கு.
ஏதேனும் ஒரு திற மூல editor அல்லது IDE பயன்படுத்துங்கள். இது பற்றி ஏதேனும் சந்தேகம் எனில் forums.TamilLinuxCommunity.org ல் கேளுங்கள்.
உங்களுக்கு ஒரு எடிட்டரில் ஒரு file உருவாக்கி, அதை ஒரு folder ல் சேமிக்கத் தெரிந்தால் போதும். அதே folder க்கு டெர்மினலில் போகத் தெரிய வேண்டும்.
PyCharm
இப்போதைக்கு PyCharm Community Edition ல் எப்படி நிரல் எழுதி இயக்குவது என்று பார்ப்போம்.
வழக்கம் போல, அதை பதிவிறக்கம் செய்து உங்கள் இயக்கு தளத்துக்கு ஏற்ப நிறுவிக் கொள்க.
அதைத் திறந்தவுடன் பின்வருமாறு ஒரு முகப்புத் திரை தோன்றும்.
அதில் New Project தெரிவு செய்து, அதில் ‘Pure Python’ என்பதை தெரிவு செய்க.
Location என்பதில் உங்களுக்குத் தோதான ஒரு folder ஐ தெரிவு செய்து கொள்க. ஒரு புது folder உருவாக்கி, அதை தெரிவு செய்வது நல்லது.
பிறகு, அடியில் உள்ள create பட்டனை கிளிக் செய்க.
இப்போது, இடது புறம் உள்ள ProjectTree ல் New -> Python File ஐ தெரிவு செய்க.
இப்போது, உங்கள் Python File க்கு ஒரு பெயர் தருக. உதாரணம் – helloworld.py
இந்தப் படத்தில் car.py என்ற பெயர் தரப்பட்டுள்ளது.
இப்போது, ஒரு புது file உருவாகி, உங்கள் ஆணைக்காக காத்திருக்கும். இனி என்ன? ‘நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்’ என்று பாட வேண்டியதுதான்.
இப்போது திரையில் ‘print(“hello world”)’ என்று எழுதி,
எடிட்டர் திரையில் Right Click செய்து, ‘Run Helloworld’ ஐ தெரிவு செய்க.
உதாரணம்,
அல்லது, ⌃Ctrl ⇧Shift r அழுத்தியும் இயக்கலாம்.
இப்போது, கீழே “Run Window” என்ற பகுதியில், நிரல் இயக்கப்படுவதைக் காணலாம்.
இதே போலத்தான் எல்லா புது file க்கும் செய்ய வேண்டும்.
ஏறக்குறைய VScode ம் இதே போலத்தான் இருக்கும்.
இப்போது, வேறு சில எடிட்டர்கள் பற்றி சற்று காண்போம்.
Vim
குனு லினக்ஸ் பயனர்கள் உங்கள் package manager வழியே vim நிறுவிக் கொள்க.
மேக் பயனர்கள் homebrew வழியே macvim என்பதை நிறுவுக.
விண்டோசு பயனர்கள் www.vim.org/download.php ல் இருந்து பதிவிறக்கம் செய்து நிறுவுக.
பின், jedi-vim என்ற plugin நிறுவுக. github.com/davidhalter/jedi-vim இது autocompletion க்கு உதவும்.
டெர்மினலில் pip install -U jedi ஐ இயக்கி, python க்கான jedi package ஐ நிறுவுக.
Emacs
குனு லினக்ஸ் பயனர்கள் வழக்கம் போல package manager வழியே நிறுவிக் கொள்க.
மேக் பயனர்கள் emacsformacosx.com/ இல் இருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்க.
விண்டோசு பயனர்கள் ftp.gnu.org/gnu/emacs/windows/ இல் இருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்க.
பின் அதில் elpy என்ற package ஐ நிறுவிக் கொள்க. காண்க github.com/jorgenschaefer/elpy/wik
இணைய எடிட்டர்கள்
இணைய வசதி நிறைய இருப்போர், colab.research.google.com/ மூலமும் எளிதாக பைத்தான் நிரலை எழுதி இயக்கலாம்.
போன்ற பல்வேறு இணைய வழி எடிட்டர்களும் உள்ளன.
python source file ஐ இயக்குதல்
இப்போது, எந்த எடிட்டர் பயன்படுத்தினாலும், பயன்படக் கூடிய ஒரு எளிய வழியைக் காண்போம்.
முதலில் டெர்மினல் திறந்து கொள்க.
ஒரு folder உருவாக்குக
அதில் ஒரு பைத்தான் கோப்பு உருவாக்குக
டெர்மினலில் அந்த folder க்கு செல்க
அந்த பைத்தான் நிரலை இயக்குக python3 filenme.py
இவையே தான் அடிப்படை. இதை செய்ய முடிந்தால் போதும். நீங்கள் பாதி கிணறு தாண்டிவிட்டீர்கள்.
எந்த நிரலாக்க மொழியை கற்கும் போதும், முதலில் ‘Hello World!’ என்பதை திரையில் காட்டும் நிரலை முதல் நிரலாக கற்பது தொன்று தொட்டு வரும் பழக்கம். நிரல் தேவதைகளை வணங்கி, பூசை செய்து வரவேற்கும் வழக்கம் இது.
– Simon Cozens – ‘Beginning Perl’ என்ற நூலின் ஆசிரியர்.
நாமும் அப்படியே செய்வோம்.
0 . முதலில் டெர்மினல் ஐ திறந்து கொள்க.
விண்டோசில் run-> cmd. குனு லினக்ஸ், மேக் கில் டெர்மினல்.
முதலில் ஒரு folder உருவாக்குவோம்.
குனு லினக்ஸ், மேக், விண்டோசு மூன்றிலும் ஒன்றே. – mkdir code
இதில் helloworld.py என்ற file ஐ, ( .py என்ற extension அவசியம்) ஏதேனும் ஒரு எடிட்டர் மூலம் உருவாக்கி, இதே folder ல் சேமிக்கவும்.
அதற்குள் நுழைக.
cd code
அந்த பைத்தான் உள்ளதா என்று சோதிக்கவும்.
குனு லினக்ஸ், மேக் – ls
விண்டோசு – dir
helloworld.py இருக்கிறதா? மகிழ்ச்சி.
அங்கே இல்லையெனில், அந்த பெயரில் நிரலை அங்கே சேமிக்க வேண்டியது பற்றி தேடி அறிந்து கொள்ளுங்கள். எப்படியாவது அந்த folder ல் helloworld.py வர வைத்து விடுங்கள்.
இப்போது அதை இயக்கலாம் வாங்க.
குனு லினக்ஸ், மேக்
python3 helloworld.py
விண்டோசு
python helloworld.py
முதல் முறை நிரல் எழுதும் போது பல்வேறு பிழைகள் செய்வோம்.
உதாரணமா print க்குப் பதிலாக Print என்று எழுதி விடுவோம். சின்ன p க்கு பதிலாக பெரிய P.
அதே போல, print க்கு முன்பே சில எழுத்து இடைவெளி space தருவோம்.
இவை அல்லாமல், விதம் விதமாக தவறுகள் செய்வோம்.
அவை அனைத்தையும், ஒவ்வொன்றாக திருத்திக் கொண்டே வரவேண்டும்.
நிரல் எழுதுக
இயக்குக
பிழைச்செய்தி படிக்க
நிரலை திருத்துக
இயக்குக
பிழைச்செய்தி படிக்க – ….
நிரலாக்கம் என்பது வாழ்நாள் முழுவதும் இதை செய்வது மட்டும்தான்.
எனவே பிழைகளைக் கண்டு அஞ்ச வேண்டாம். அவையே நமது உற்ற நண்பன். ‘பிழை நல்லது’.
நிரலை இயக்கும் போது என்ன நடக்கிறது?
ஒரு பைத்தான் நிரலில் பொதுவாக, ஒன்று முதல் பல வரிகள் இருக்கும். சில நிரல்களில் பல ஆயிரம் வரிகள் கூட இருக்கலாம். வரி என்பது இங்கே line. வருமான வரி, விற்பனை வரி போன்ற வரி அல்ல.
பைத்தான் interpreter நிரலில் முதல் வரியைப் படிக்கும், அதை இயக்கும். பிறகு அடுத்த வரியைப் படிக்கும், அதை இயக்கும். கடைசி வரி வரை இதே தான்.
இதற்கு இடையில், ஏதாவது வரியில் ஏதாவது பிழை இருந்தால் போச்சு. அவ்வளவுதான். ஒரு பாராவிற்கு பிழைச் செய்தி காட்டிவிட்டு, இயக்குவதை நிறுத்தி விடும்.
அதை சரி செய்து, மீண்டும் இயக்கினால், மீண்டும் முதல் வரியில் இருந்து இயக்கம் தொடங்கும்.
‘வாழ்க்கையே ஒரு வட்டம்’ என்று சும்மாவா சொன்னார்கள்.
உதவி பெறுவது
print() என்பது நாம் பார்த்த முதல் function. இது போல பல function களைப் பற்றி படிப்போம். அவை பற்றி விரிவாக அறிந்து கொள்ளவும், ஏதேனும் சந்தேகம் எனில் பைத்தானிலேயே தேவையான உதவி ஆவணங்கள் உள்ளன. அதற்கென்றே help() என்ற ஒரு function இருக்கிறது.
உதாரணமாக, help(print) என்று தந்தால் print() பற்றிய விரிவான விளக்கம் கிடைக்கும். உதவிப் பக்கத்தில் இருந்து வெளியேற q அழுத்துக. q for quit என்று நினைவில் நிறுத்துக.
இதுவரை என்ன பார்த்தோம்?
ஒரு எடிட்டரில் print(‘helloworld’) என்ற வரியை எழுதி, helloworld.py என்ற பைத்தான் நிரலாக சேமித்தோம். அதை எப்படி டெர்மினல் வழியே இயக்குவது என்று பார்த்தோம். PyCharm வழியே எப்படி இயக்குவது என்றும் பார்த்தோம்.
இனி வரும் அத்தியாயங்களில், அடுத்தடுத்த நிரலாக்கப் பாடங்களை கற்கப் போகிறோம்.
மூன்றாம் மொழியாகப் பைத்தான் பயிலும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
முந்தைய பகுதிகள்
எளிய தமிழில் பைத்தான் – 1
எளிய தமிழில் பைத்தான் – 2
We are people from FOSS Communities around the world…
Tamil Linux CommunityAn inscription in Thirumazhapadi. Dated 1026 CE, says it is in accordance with another 1013 CE inscription that mentions copying old inscriptions from the main shrine in a register when it was rebuilt & reinscribing them.
1026 CE: "விதிதபடி முன்பு கல்வெட்டுச் சொர்த்த பொத்தக படி"
1013 CE: "திருக்கற்றளி யெடுக்க ஸ்ரீவிமானம் வாங்கி இஸ்ரீவிமானத்துள்ள கல்வெட்டுப்படி பொத்தகத்தில் சொர்ப்பிக்க"
I love how these show the language of the time - பொத்தகம், சோர்த்த etc.
மின்னூல்: வானம் தொட்டு விடும் தூரம்தான்
https://freetamilebooks.com/ebooks/vaanam_thotuvidum_thooramthan
உரிமை: கிரியேட்டிவ் காமன்சு.படிக்கலாம்,பகிரலாம்.
#Tamil #Ebooks #Kaniyam #தமிழ் #கணியம் #CreativeCommons
Download ebooks Android, iOS, Kindle கருவிகளில் படிக்க…
Free Tamil EbooksTamil Nadu should become so scientifically advanced, so that we can have one language policy like Japan, Germany, China etc..
#India #Tamil #Tamilnadu #Science #Technology #Industry #STEM
Gondi peoples Bison dance. They still dance the way as depicted in the Indus valley seals. I think these people are worshiping a tree. Ancient Indians worshiped nature.
#India #History #Civilization #Dravidian #DravidianLanguage #Tamil #Worship #Nature #Religion