Show newer

கற்றுக் கொள்தலை காட்டிலும்
கற்றுத் தெளிதல்
சிறப்பு .

உடனிருக்கும் எழுத்துகளுக்கு
நன்றி கடன்
பட்டு இருக்கிறேன் ,

அடர்த்தியாய்
மை தீட்டுகையில்
எண்ணிக் கொள்வேன்.

இப்பிரபஞ்ச பேரழகி நானென,

சிரித்துக் கடப்பேன்.

மௌனம் சுமக்கும் விழிகள்
பேரழகு,

அவ்வளவாய் புலப்படாத
எளிதில் வசப்படாத

இந்த வாழ்க்கையையும்
வாழ்ந்து தீர்க்க வேண்டியதே

எழுதப்படாத விதி,

வாழ்வோம்
செமையா வாழ்வோம்

வாழ்ந்து தீர்ப்போம்.

பத்து ஆயிரம் ரூவாக்கு
ஒரு மொபைல் வாங்கவே

நாம சொந்த அறிவை
யூஸ் பண்றது இல்லை ,

நாம எல்லாம்
கருத்து சொல்லி
நாட்டை திருத்தி

இப்பவே
கண்ணை கட்டுதே.

இயங்க வேண்டிய
நிர்ப்பந்தம் ,

மற்றபடி
பிரபஞ்ச காதல்

இன்னும் தேடலாய்.

இழப்பு இறப்பு
துக்கம் துயரம்

இதைத்தாண்டி

பழி ஏற்று
பலிக்கடா வாழ்க்கை ,

இயல்பாய் நடக்கிறேன்,

எதிர்வருபவரை பொறுத்தே
என் கர்வத்தை
கூட்டவும் குறைக்கவும்
செய்கிறேன் ,

இறுதி பயணம்

உடன் மரிக்க
கொஞ்சம் மலர்கள் .

நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்

கேட்டாலும் வருமா
கேட்காத வரமா ,

susi123 boosted

இலக்கியம் இசை

என் பங்களிப்பென
எதுவும் இல்லை
இருந்தும்

இவ்விரண்டும்
இன்னும் உயிர்ப்போடு

ஆட்கொண்டு
ஆளுகை செய்து

வாழ வைக்கும்
வள்ளலாய் உடனிருக்கிறது.

susi123 boosted

இலக்கியம் இசை

உணர்ந்து கொள்ள
தவறி இருந்தால்

சராசரி மனுஷியாய்
காலத்தை கடத்தி இருக்கலாம்.

ஏம்மா
ட்விட்டரில் தான்
poll வச்சி
உசுர எடுத்தீங்க.

இங்கேயுமா???

உங்களுக்கு எல்லாம்
பயந்து தானே
இங்க ஓடி வந்தோம்.

என்னம்மா
இப்படி பண்றீங்களே.

ம்மா.

susi123 boosted

Interesting fact of the day: despite the moon only being 1/4th the diameter of the earth it is a whole 1/80th the mass! But in terms of volume it is 1/50th the volume.

People don't realize how the relationship between diameter and volume is non linear. So it creates these very unexpected differences, especially at large scales.

கற்றுக் கொடுக்காதது
வாழ்வல்ல,

கற்றுக் கொள்ளாதவன்
மனிதன் அல்ல,

நாளைய தினத்தை பற்றிய
வருத்தம் அவ்வப்போது
வந்து போனாலும்

விடுமுறைநாளும்
சுடுசோறும்
நாட்டு கோழி குழம்பும்
மீன் வறுவலும்
ரசமும்

இந்த வாழ்க்கையை
இரசிக்க கற்றுக் கொடுக்கிறது ,

susi123 boosted

My mood throughout the day:
☺️😂🤣😐😶😭😢😒😏

Show older
Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.