மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சென்னையில் முதன்முறையாக,கல்லீரல் செயலிழந்த நபருக்கு அவரது மகளிடமிருந்து கல்லீரலின் ஒரு பகுதியை பெற்று கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள், கல்லீரலை தானமாக வழங்கிய செல்வி.நிவேதா ஆகியோர் சந்தித்து வாழ்த்துபெற்றனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இந்தியாவிற்கான நார்வே நாட்டின் தூதர் திரு.ஹான்ஸ் ஜேக்கப் ஃப்ரைடென்லண்ட் (Mr.Hans Jcob Frydenlund) அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

மாண்புமிகு முதல்வர் அவர்கள் சீர்காழியில் புரட்சித்தலைவர் MGR அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள கல்விசார், நிர்வாக கட்டடங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்துவைத்து பி.எம்.பிர்லா கோளரங்கத்தில் நிறுவப்பட்டுள்ள கோளரங்க கருவிகளை துவக்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 41 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடம் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி தமிழகத்தை கஜா புயல் தாக்கிய போது தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வறிக்கையின் நகலை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளர் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று வணிகவரி (ம) பதிவு துறை சார்பில் சென்னை, திருவள்ளூர், நாமக்கல், திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 3 ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிடங்கள், வணிகவரி (ம) சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

கழக அரசின் சாதனைகளை விளக்கி மதுரை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் 6 நாட்கள் "தொடர் ஜோதி நடைபயணம்" மேற்கொண்டதையொட்டி கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை மாண்புமிகு அமைச்சர் @Udhayakumar_RB அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு துணை முதலமைச்சர் @OfficeOfOPS அவர்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க நாட்டிற்கு சென்று தாயகம் திரும்பியதையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Qoto Mastodon

QOTO: Question Others to Teach Ourselves
An inclusive, Academic Freedom, instance
All cultures welcome.
Hate speech and harassment strictly forbidden.